தொழில் போட்டியால் முன்விரோதம்.. தலையில் கல்லை போட்டு பெயிண்டர் கொலை..!

Painter-killed-by-throwing-stones-at-head

திருப்பூரில் மதுபோதையில் ஆடையின்றி வீட்டு முன்பு படுத்து கிடந்த நபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.


Advertisement

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (35). திருமணமாகாத இவர், தனது தாய் ஜெயந்தியுடன் வசித்து வருகிறார். பெயிண்டர் வேலை பார்த்து வந்த இவர் தனது வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் செல்வம் என்பவரது பெயிண்டிங் கான்ட்ராக்டுகளை தொழில் போட்டியால் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. 

image


Advertisement

இருவருக்கும் இடையே தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் ஜெயந்தி தனது மகளை பார்க்க சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த சுரேஷ்குமார் பேண்ட் உள்ளிட்ட கீழாடைகள் இன்றி தனது வீட்டின் அருகே விழுந்து கிடந்துள்ளார். இதனைக்கண்ட செல்வம் சுரேஷ்குமாரை எச்சரித்து வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். 

image

ஆனால் மது போதையில் இருந்த சுரேஷ்குமார் செல்வத்தை கடுமையாக திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அருகில் இருந்த கல்லை எடுத்து சுரேஷ்குமார் தலையில் போட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலையில் சுரேஷ்குமார் இடுப்பில் ஆடைகள் இன்றி தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


Advertisement

 

 

image

 

விரைந்து வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செல்வத்தை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement