நாம் தமிழர் கட்சி சார்பில் 10 லட்சம் பனைவிதைகள் நடும் விழா.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் பனைவிதைகளை நடும் விழாவை சீமான் தொடங்கிவைத்தார்.


Advertisement

 image

தமிழகம் முழுவதும் இன்று  ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகளை நாம் தமிழர் கட்சியினர் நடவுசெய்து வருகின்றனர். கடந்த ஆண்டும் இதேபோல பல லட்சம் பனைவிதைகளை நடவு செய்த நாம் தமிழர்கட்சி, இந்த ஆண்டும் தொடர்ச்சியாக இந்த விழாவினை முன்னெடுத்து செய்துவருகிறது.


Advertisement

 இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ இன்று ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகளை நடவுசெய்து வரும் நாம் தமிழர் உறவுகளுக்குப் புரட்சி வாழ்த்துகள்! அம்பத்தூர் தொகுதி, சதாக்குளம் பகுதியில் நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைத்திருவிழாவை தொடங்கி வைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

image

பனைவிதைப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் “ புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினியால் நாங்கள் சந்திப்பதை போன்ற அவச்சொற்களை சந்திக்க முடியாது. வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதில் இருந்து அவர் மீதான முரண் நீங்கியது” என்று தெரிவித்தார்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement