களைத்த தோனியால் கலங்கிய ரசிகர்கள்..! : தோல்வியிலும் குவியும் பாராட்டுக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி தோனி இறுதிவரை போராடிக் களைத்தது ரசிகர்களை கலங்க வைத்தது.


Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டி என்றாலே அதைக்காண ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் இன்று நடந்த ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியையும் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் பெரும் ரசிகர் பட்டாளம் பார்வையிட்டனர். டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்திருந்தது.

\image


Advertisement

165 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து ஆடிய சென்னை அணியில் தொடக்க வீரர் டு பிளசிஸ் மட்டும் 22 ரன்களை எடுக்க, ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் தோனி அணியின் ஸ்கோரை உயர்த்தப் போராடினர். அதிரடி காட்டிய ஜடேஜா 35 பந்துகளில் 50 ரன்களை விளாவிட்டு வெளியேறினார்.

image

அதன்பின்னர் சாம் குரானுடன் கை கோர்த்த தோனி வெற்றிக்காக போராடினார். 18 வது ஓவரில் அடுத்தடுத்து 2 முறை 2 ரன்களுக்காக ஓடிய தோனி, பெரிதும் மூச்சு இளைத்தார். அப்போது ஆட முடியாமல் அவர் சிரமப்பட்டது அனைவரது மனதிலும் உருக்கத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று கடைசி ஓவரில் வெற்றிக்காக சிக்ஸர் அடிக்க முயன்று முடியாமல், ரன்களை ஓடி எடுத்த தோனி களைத்துப்போனது சென்னை ரசிகர்களை கலங்க வைத்தது.


Advertisement

image

அவரால் கடைசி வரை ரன் எடுக்கமுடியாமல் சென்னை அணி தோற்றது. இருந்தாலும், “நீங்கள் போராடியதே போதும், நீங்கள் எப்போது எங்களுக்கு ‘தல’ தான் தலைவா” என ரசிகர்கள் தோனியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி ட்ரெண்ட் செய்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement