கொடைக்கானல்: மயிலாடும் பாறை சாலையோர பூங்காவை திறக்க கோரிக்கை...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானல் மலைச்சாலையில் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வரலாற்று புகழ்பெற்ற மயிலாடும் பாறை நெடுஞ்சாலை பூங்காவை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. image


Advertisement

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கொடைக்கானல் மலைச்சாலையில் வரலாற்று புகழ்பெற்ற மயிலாடும் பாறை எழில் காட்சி பகுதி உள்ளது. இது மலைச்சாலையில் பயணிக்கும் பயணிகள் சிறிது ஓய்வெடுத்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையோர பூங்காவாகும். 

image


Advertisement

 இப்பூங்கா சில வருடங்களாக வனத்துறையின் ஆக்கிரமிப்பில் சிக்கி, திறக்கப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த பூங்காவை திறக்க வேண்டும் என கடந்த ஆண்டுகளில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.  

image

அதனைத்தொடர்ந்து மலையேறி வரும் சுற்றுலா பயணிகள் பார்வையிடவும், ஓய்வெடுக்கவும் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இப்பூங்காவை பூட்டியே வைத்துள்ளனர். இந்த விசயத்தை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு, மீண்டும் பூங்காவை திறந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement