ஆறு நாட்கள் ஓய்வை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங்.
நடப்பு ஐபிஎல் சீஸனில் மும்பை, ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணியுடன் லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி நாளை ஐதராபாத் அணியுடன் நான்காவது லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது. சுமார் ஆறு நாட்கள் ஓய்விற்கு பிறகு சென்னை அணி இந்த போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஓய்வு நாட்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஃபிளெம்மிங்.
“அடுத்ததாக நாங்கள் விளையாட உள்ள ஆட்டங்களில் என்ன செய்ய வேண்டுமென்ற தெளிவு கிடைத்துள்ளது. அது தொர்பாக பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்து ஐந்து போட்டிகள் துபாயில் ஆட உள்ளதை சாதகமாக பார்க்கிறோம். அதன் மூலம் பிட்ச் கண்டீஷனை நன்றாக அறிந்து கொண்டு அதற்கேற்ற படி சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன்.
இந்த சீஸனின் துவக்கம் கொஞ்சம் பின்னடைவாக இருந்திருந்தாலும் அதிலிருந்து அணியை வெற்றி பாதைக்கு திரும்ப செய்ய இந்த ஆறு நாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம். அதே போல அனுபவ வீரர்கள் ராயுடு மற்றும் பிராவோ அணியில் இணைவது பலம் தான்” என தெரிவித்துள்ளார் ஃபிளெம்மிங்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?