ரூ.2290 கோடி செலவில் முப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்கும் இந்தியா..!

Defence-Minister-Rajnath-Singh-unveils-Defence-Acquisition-Procedure

அமெரிக்காவிடம் இருந்து 2ஆயிரத்து 290 கோடி ரூபாய் செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

டெல்லியில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், அமெரிக்காவிடம் இருந்து முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

image


Advertisement

அதன்படி, கடற்படை மற்றும் விமானப்படைக்கு 970 கோடி ரூபாயில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயு‌தங்கள் வாங்கவும், ராணுவத்திற்கு 780 கோடி ரூபாயில் 72 ஆயிரம் சிக் சா‌யர் தானியங்கி துப்பாக்கிகளை வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கி‌றது. இதே போன்று, 540 கோடி ரூபாய்க்கு நிலையான எச்.எப். டிரான்ஸ் ரிசீவர் கருவிகள் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் எல்லை பிரச்னை காரணமாக சீனாவின் அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் வாங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement