ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள செல்போன்கள் - கலக்கத்தில் பாலிவுட்

Bollywood-actress-cellphones-chased-and-sent-for-verification


புகழ்பெற்ற பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். கடந்த 25ஆம் தேதி நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் ஆகியோரிடம் மும்பை போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் ஆறு மணி நேரம் ‌விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை தீபிகா படுகோன், ‌சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் அதிகாரிகள் முன் ஆஜரானார்கள். 


Advertisement

image

மூன்று நடிகைகளிடமும் சுமார் ஆறு மணி நேரம் தனித்தனியே விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது தீபிகா படுகோன் மூன்றுமுறை அழுததாக தகவல் வெளியானது. அதன்பின்னர் நடிகைகளின் செல்போன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகைகள், தாங்கள் புகைப்பிடித்தது கூட இல்லை என விசாரணை‌யின்போது தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

போதைப்பொருள் சர்ச்சை... விசாரணையில் அழுத தீபிகா படுகோன்? 

அதேபோல், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு போதைப் பழக்கம் இருந்ததாக கூறப்படுவது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் வாக்குமூலம் அளித்துள்ள‌னர். ஆனால் அவர்க‌ளிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களை ஆய்வு செய்தபிறகு இவற்றுக்கெல்லாம் பதில் தெரியவரும் என போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

image


Advertisement


இதனிடையே பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான கரண் ஜோகர் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஷிதிஜ் ரவி பிரசாத்தின் வழக்கறிஞர் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார். கரண் ஜோஹருக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க ஷிதிஜ் ரவி பிரசாத்தை அதிகாரிகள் மிரட்டியதாக அவர் கூறியுள்ளார். ஆனால் குற்றச்சாட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். போதைப் பொருள் சர்ச்சை தொடர்பாக ஷிதிஜ் ரவி பிரசாத் க‌டந்த 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நடிகைகளின் செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் பாலிவுட் திரையுலகமே தற்போது கலக்கத்தில் உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement