ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு: 1.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் உள்ள ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் சேர்வதற்கான தகுதித்தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு இன்று நடைபெறுகிறது.


Advertisement

ஒவ்வொரு ஆண்டும் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அதில் தேர்வாகும் மாணவர்கள் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

நடப்பு ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்து 4 ஆயிரம் பேர் எழுதினார்கள். அதற்கான தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. 


Advertisement

image

முதன்மைத் தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்த கட்டமாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று நடைபெறும் அட்வான்ஸ்டு தேர்வை நாடு முழுவதும் 222 நகரங்களில் உள்ள ஆயிரம் மையங்களில் 1.60 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement