செல்போனில் பேசியபடியே சென்ற இளம்பெண் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு: ஆம்பூர் சோகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சியின் குட்டகந்தூர் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி, அவரது மனைவி லக்சனா. லக்சனா அவர்களது வீட்டின் அருகே உள்ள  விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடி சென்ற பொழுது திடீரென கால்தவறி கிணற்றில் விழுந்துள்ளார் பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கிணற்றில் விழுந்த லக்சனா காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் பலன் அளிக்காமல்  நீரில் மூழ்கி உயிரிழந்தார் லக்சனா 


Advertisement

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் காவல்துறையினர்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் உறவினர்கள் இடையே விசாரணை நடைபெற்று வருகிறது

loading...

Advertisement

Advertisement

Advertisement