மக்களால் வெறுக்கப்பட்டவர் சசிகலா - அமைச்சர் கே.சி.வீரமணி...

Sasikala-hated-by-the-people---Minister-KC-Veeramani----

சசிகலாவை எதிர்த்து தான் ஆட்சியும், கட்சியும் நடைபெற்று வருகிறது. அவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் என்று வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டியளித்தார்.


Advertisement

 

 


Advertisement

image


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், பேட்டரியில் இயங்கும் நாற்காலிகள், காது கேளாதவர்களுக்கான கருவிகள், இலவச மண்பாண்ட மின்விசை சக்கரம் வழங்குதல் என 200 பயனாளிகளுக்கு ரூ. 40.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

 


Advertisement

 

 

image


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் "சசிகலாவை எதிர்த்து தான் ஆட்சியும் கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேவையில்லாதவர்கள், மக்களால் வெறுக்கப்படுகின்றவர்கள் என்ற நிலையில் தான் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் பத்திரிகையாளர்கள் தான் எதாவது செய்தியை உருவாக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்திகளை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எங்களை பொறுத்தவரை நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்" என்று கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement