பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற வாலிபர்... தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

The-young-man-who-tried-to-snatch-the-chain-from-the-girl-----The-public-who-gave-Dharmaadi----

பெண்ணிடம் செயினை பறிக்க முயன்றவரை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள். 


Advertisement

image
வேலூர் மாவட்டம் ஊசூரில் சாலையில் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறிக்க முயன்றுள்ளனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் செயினை பறிக்க முயன்றவர்களை விரட்டிச் சென்றதில் தெள்ளூர் அருகே ஒருவர் தப்பியோடிய நிலையில் மற்றொருவர் அங்குள்ள புதரில் ஒளிந்துள்ளார். அவரைபிடித்த அப்பகுதி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர். 

image


Advertisement


பின்னர் இது குறித்து அரியூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடம் பிடிபட்ட நபரை ஒப்படைத்தனர். பொது மக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்தவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்னர் அரியூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


Advertisement

 

 

image


காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட இளைஞர் ஊசூர் பகுதியை சேர்ந்த பாஸ்வா (21) என்றும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு செயின் பறிப்பு வழக்கில் சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement