கடன் கொடுப்பதாக நண்பர் சொன்னதை நம்பிச் சென்ற இளம்பெண் - காத்திருந்த அதிர்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியான இளம்பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

27 வயதான இளம்பெண் ஒருவர் சுற்றுலா வழிகாட்டியாகவும் டிக்கெட் புக்கிங்க் ஏஜெண்டாகவும் செயல்பட்டு வருகிறார். அந்த பெண் தனக்கு அறிமுகமான மனோஜ் சர்மா என்பவரிடமிருந்து 18 லட்சம் கடன் வாங்க அணுகியுள்ளார். அதில் முதல் தவணையாக 7 லட்சம் வாங்கியுள்ளார். கடனின் இரண்டாவது தவணை பணத்தை வசூலிக்க மனோஜ் சர்மாவை அணுகியுள்ளார்.

அவர் தான் தங்கியிருக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு வருமாறு கூறியுள்ளார். ஓட்டலின் அருகே சென்ற அந்த பெண் வெளியே வருமாறு மனோஜ் சர்மாவிடம் கூறியுள்ளார். ஆனால், தனது அறைக்கு வந்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு மனோஜ் சர்மா கூறியதாக தெரிகிறது. பணத் தேவை இருந்ததால் அவர் கூறியதை நம்பி அறைக்கு சென்ற அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.


Advertisement

Tourist guide in Delhi gang-raped in hotel room, one held | Delhi News |  Zee News

அங்கு ஏற்கெனவே மனோஜ் சர்மாவின் மேலும் நான்கு நண்பர்கள் இருந்தனர். இதையடுத்து அந்த இளம்பெண்ணை 5 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து மனோஜ் சர்மா அந்த இளம்பெண்ணை வீட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த அவலம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரான மனோஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும், குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement