மாநிலங்களவை துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

Opposition-parties-submit-a-no-confidence-motion-against-Rajya-Sabha-deputy-chairman-Harivansh-

எதிர்க்கட்சிகளின் பல்வேறு திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் மாநிலங்களவைத் துணைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.


Advertisement

மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின. வேளாண் மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

அமளிக்கிடையே இரு மசோதாக்களும் நிறைவேறியதையடுத்து, மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவைத் துணைத்தலைவரான ஹரிவன்ஸ்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. எதிர்க்கட்சியினர் கடிதம் அளித்துள்ளதைதொடர்ந்து மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடு நாளை இதுகுறித்து பரிசீலிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement