தோனிக்கு வயதானதாக நினைக்காதீர்கள் - எச்சரித்த பதான்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் இன்று தொடங்க இருக்கின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இன்றைய போட்டியை பலரும் எதிர்பார்க்க முக்கிய காரணம் தோனி. நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனி 435 நாட்களுக்கு பிறகு இன்றுதான் களம் காண இருக்கிறார்.


Advertisement

image

கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள் பலருமே தோனியின் ஆட்டத்தை காண ஆவலாக உள்ளனர். இதற்கிடையே ஐபிஎல் போட்டிக்காக தோனி கடுமையான பயிற்சியிலும் ஈடுபட்டார். இந்நிலையில் தோனியின் ஆட்டம் இன்று எப்படி இருக்குமென அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்க, இர்பான் பதான் பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில்,


Advertisement

அனைத்து பந்து வீச்சாளர்களும், தயவுசெய்து கவனிக்கவும். மகேந்திர சிங் தோனிக்கு எதிராக நீங்கள் பந்து வீசும்போது கவனமாக இருங்கள். அவர் இந்திய கேப்டனாக வருவதற்கு முன்பு பார்த்த தோனியை நாம் காணலாம். அவர் கேப்டனாக மாறுவதற்கு முன்பு, அவருக்கு அந்த கூடுதல் பொறுப்பு இல்லை, எனவே அவர் சுதந்திரமாக விளையாடுவார்.

image

அது நடந்தால், பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள். எனவே அனைத்து பந்து வீச்சாளர்களும் தோனியை எதிர்த்து நிற்பது கடினமாக இருக்கும். அவரது வயதைப் பார்க்க வேண்டாம், அவர் இவ்வளவு காலமாக கிரிக்கெட் விளையாடவில்லை என நினைக்க வேண்டாம். பந்து வீச்சாளர்களை வீழ்த்தி தோனி சுதந்திரமாக விளையாடுவதை நாம் காணலாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், அவர் கேப்டனாக மாறுவதற்கு முன்பு அவர் பயன்படுத்திய விதம். நான் அதை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement