'நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்' - சூர்யா

actor-suriya-said-I-am-humbled-and-inspired-by-the-fairness-and-justice-demonstrated-by-the-Honble-High-Court-of-Madras

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


Advertisement

நடிகர் சூர்யா நீட் நுழைவுத்தேர்விற்கு எதிராக வெளியிட்டிருந்த அறிக்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்த விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதே நேரம் கொரோனா காலத்தில் நீதிமன்றப் பணியை அறிந்துகொள்ளாமல் சூர்யா விமர்சித்திருப்பது சரியல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

image


Advertisement

இந்நிலையில் நடிகர் சூர்யா ட்விட்டர் பதிவில் கூறுகையில், ''இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தருகிறது. நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நான் எப்போதும் நம்முடைய நீதித்துறையை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன்.

இது நம்முடைய மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கை. நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement