மழையின் காரணமாக குழந்தைகளை கட்டிலின் அடியில் உட்கார வைத்தது தொடர்பான வீடியோவை வெளியிட்ட சோனு சூட், வீடியோ குறித்தான விவரங்களை கேட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு சூழலால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் சோனுசூட் உதவிக்கரம் நீட்டினார். மேலும், சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கும் உதவி வந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மக்களையும் மாணவர்களையும் இந்தியா அழைத்துவர விமான செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். கேரளாவில் சிக்கித்தவித்த பீகார் மாநில ஆயத்த ஆடைத் தொழிலாளர்களை விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப விமான ஏற்பாடு செய்தார். விவசாயிக்கு டிராக்டர், ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தது உள்ளிட்ட உதவிகளை செய்து வந்ததால் சமூக வலைதளங்களில் அவருக்கு உதவிக்கான கோரிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
डिटेल्ज़ भेजो।
मंज़र बदलते हैं। https://t.co/dF4CXWqEwb— sonu sood (@SonuSood) September 15, 2020Advertisement
இந்நிலையில் அண்மையில் ட்விட்டர் வாசி ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “ கனமழையின் காரணமாக ஒரு பெண்மணி குழந்தைகளை உடைந்த கட்டிலின் கீழ் உட்கார வைத்து, கட்டிலின் மீது பிளாஸ்டிக் கவரை வைத்து மூடியிருந்தார். மற்றொரு பெண்மணி ஒருவர் கட்டிலின் மீது குழந்தைகளை உட்கார வைத்து அவர்கள் மீது பிளாஸ்டி கவரை வைத்து மூடியிருந்தார். இந்த வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்நிலையில் இதனை பார்த்த பாலிவூட் நடிகர் சோனு சூட் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவர்கள் குறித்தான விவரங்களை கேட்டுள்ளார்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி