இந்தியை காப்பாற்றுவதை விட கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கின்ற மொழியாக இந்தி இருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். உடல்நலக் குறைவினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ட்விட்டரில் இதனை தெரிவித்திருந்தார். மேலும், “இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. நம் நாட்டில் சுதந்திரப் போராட்டத்திற்கான புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்தே ஒட்டுமொத்த மக்களையும் ஓரணியில் ஒன்றாக திரட்ட இந்தி சக்தி வாய்ந்த ஊடகமாக பயன்பட்டு வருகிறது. அதன் அசல் தன்மையும், எளிமையும் தான் இந்தி மொழியின் பலம். இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சியை மனதில் கொண்டே புதிய கல்விக் கொள்கை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது மோடி அரசாங்கம்.
இந்தி இந்நாட்டை ஒருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் @AmitShah
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது!
இந்தியைக் காப்பாற்றுவதை விட #Covid19-லிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்!#StopHindiImposition https://t.co/mCPmfzcl7C— M.K.Stalin (@mkstalin) September 14, 2020Advertisement
மொழி மற்றும் புவியியல் எல்லைகோட்டினால் தான் ஒரு நாடு அடையாளம் காணப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் அதன் மொழிகள் தான் பலம். அது நம் ஒற்றுமையின் அடையாளமும் கூட. மொழி, கலாச்சாரம் என இந்தியா வேறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கின்ற மொழியாக இருக்கிறது இந்தி மொழி” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்தி இந்நாட்டை ஒருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது! இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? - அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு: ஆன்லைன் மூலம் கையெழுத்தான ஒப்பந்தம்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?