இலவசத்திற்கு பின்னால் போனால் தமிழகம் வளர்ச்சி அடையாது என தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக 16-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில், தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா பேசுகையில், “இளைஞர்கள்தான் நாளைய தமிழகம். கடந்த இரண்டு நாளாக நீட் தேர்வுக்கு எதிராக 3 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது வேதனை அளிக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் யார்? இங்கு எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது. தங்கள் அரசியல் வெற்றிக்காக செய்யப்படுகிறது. மூளைச்சலவை செய்து இளைஞர்கள் உயிரோடு விளையாடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஊழல் செய்யும் நிலைதான் தற்போது உள்ளது
மொழி, படிப்பு, சாதியை வைத்து அரசியல் செய்கின்றனர். மக்கள் வாய்ப்பு கொடுத்திருந்தால் கேப்டன் அறிவித்த திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். இளைஞர்களே மாற்று அரசியலை நாம் உருவாக்க வேண்டும். இலவசத்திற்கு பின்னால் போனால் தமிழகம் வளர்ச்சி அடையாது. தேமுதிக 2021 மாபெரும் சக்தியாக வரும்.” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை என்பதை தேமுதிக ஏற்றுக்கொள்ளும். நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்களை கொடுமைப்படுத்துவது, மாணவர்களை அலைக்கழிப்பது என்ற கலாச்சாரத்தை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. கல்வித்தரம் உயரும். அனைவருக்கும் ஒரே கல்வி என்பதை தேமுதிக வரவேற்கும். நீட் தேர்வு வருவதற்கு முதலில் கையெழுத்து போட்டது யார்? தமிழகத்தில் அனைத்தையும் அரசியல் ஆக்குகிறார்கள். மொழியில் அரசியல். படிப்பில் அரசியல்.
ஒரு மாணவன் இறந்தால் உடனே 5 லட்சம் கொடுக்க ஓடுகிறார்கள். தொடர்ந்து மாணவர்கள் இழப்பை சந்திக்கும் போது காசு கொடுத்தார்களா? மரணத்தில் அரசியல் செய்யும் கீழ்த்தரமான அரசியலை நான் தமிழ்நாட்டில் பார்க்கிறேன். காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் வந்தது. மாணவர்களுக்கு தைரியம் கொடுங்கள். மொழியை வைத்து அரசியல் செய்யும் குடும்பத்தினருக்கு அந்த மொழி தெரியும்.
அரசியல் ஆதாயத்திற்காக இந்தி எதிர்ப்பு என்று விளம்பரம் செய்கிறார்கள். தமிழ் நம்முடைய தாய்மொழி. ஆனால் குடும்பத்தை காப்பாற்ற அனைத்து மொழியும் அவசியம். சூர்யா கூறிய கருத்திற்கு ஒரு நீதிபதி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். மற்றொரு நீதிபதி வேறொரு கருத்தை பதிவு செய்துள்ளார். எது சரி, தவறு என்பதை சூர்யா முடிவு செய்து பேச வேண்டும் இனிமேல். விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணத்தில் ஊழல் நடந்திருப்பது வேதனைக்குரியது.
பல்வேறு இன்னல்களுக்கிடையே விவசாயம் செய்யும் விவசாயிகளின் பணத்தைத் திருடுவது கேவலமான செயல். யாராக இருந்தாலும் இது வன்மையாக கண்டிக்க கூடியது.மத்திய மாநில அரசுகள் இந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Loading More post
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் காலமானார்!
மாவோயிஸ்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குதல் - மதுரை வீரர் உயிரிழப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!