சென்னையில் காணாமல் போன 9 மீனவர்கள் 55 நாட்களுக்கு பிறகு மியான்மரில் மீட்பு.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் காணாமல் போன 9 மீனவர்கள் 55 நாட்களுக்குப் பிறகு மியான்மரில் மீட்கப்பட்டனர்.


Advertisement

image

சென்னை காசிமேட்டிலிருந்து கடந்த ஜூலை 23ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் கரை திரும்பவில்லை. காணாமல் போன மீனவர்களின் நிலை குறித்து கண்டறிய வலியுறுத்தி, அவர்களின் உறவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடலில் தத்தளித்த மீனவர்களை 55 நாட்களுக்குப் பிறகு மியான்மர் கடற்படையினர் மீட்டனர். ஆழ்கடலில் 10 நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் வகையில் சென்ற மீனவர்கள் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் கடல் நீரோட்டத்தின் போக்கில் மியான்மருக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.


Advertisement

 

தற்போது அந்த 9 மீனவர்களையும் மியான்மர் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளதாக படகு உரிமையாளர் பாலாஜிக்கு தகவல் கிடைத்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement