"இதுவும் கடவுளின் செயல் என கடந்து செல்ல வேண்டுமா"-ராகுல்காந்தி காட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி. 


Advertisement

image

தற்போது மீண்டும் ட்விட்டர் மூலமாக மத்திய அரசிடம் கேள்வி கேட்டுள்ளார் அவர்.


Advertisement

“சீனர்கள் நம் நிலப்பரப்பை ஆக்கிரமித்து விட்டார்கள். அதை எப்போதுதான் மீட்டெடுக்க போகிறீர்கள். அதற்கான திட்டத்தை ஏதேனும் இந்திய அரசு கொண்டுள்ளதா? 

அல்லது இதுவும் கடவுளின் செயல் என கடந்து செல்ல வேண்டுமா?” என அந்த ட்வீட்டில் ராகுல் காந்தி கேட்டுள்ளார். 


Advertisement

அண்மையில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ‘கடவுளின் செயல்’ என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருந்ததை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி இதை தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement