இட்லி சாப்பிட மறுத்த ஐந்து வயது பெண் குழந்தையை அடித்துக் கொன்ற பெரியம்மாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேலவிழி கிராமத்தை சேர்ந்தவர் ரோசாரியோ. இவரது மனைவி ஜெயராணி. இவர்களுக்கு 5 வயதில் ரென்சிமேரி என்கிற குழந்தை இருந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ரோசாரியோ வேறொரு திருமணம் செய்துகொண்டார்.
ஜெயராணியின் மகளை அவளது சகோதரி ஆரோக்கியமேரி வளர்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு ஆரோக்கியமேரி இட்லி கொடுத்துள்ளார். ஆனால் அதை சாப்பிட மறுத்த குழந்தை பக்கத்து வீட்டுக்கு ஓடிவிட்டது. இதனை அறிந்த ஆரோக்கியமேரி, குழந்தையை ரோட்டில் போட்டு அடித்து மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வந்து கட்டையால் தாக்கி உள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டினர், கதவை திறந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.ஆனால் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து தியாகதுருகம் போலீசார் ஆரோக்கியமேரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?