”தாயின் 2வது கணவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்” 14 வயது சிறுமி போலீசில் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாமக்கல் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் 2-வது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுமி மற்றும் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.


Advertisement

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாயின் 2-வது கணவர் பரமநாதன் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். இச்சிறுமி தனது பாட்டி மற்றும் உறவினருடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

image


Advertisement

அதில் “கடந்த ஜூலை 17-ம் தேதி எனது தாய் வேலைக்கு சென்று விட்டார். அப்போது மதியம் வீட்டிற்கு வந்த பரமநாதன் என்னை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து விட்டார். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டினார். இதன் பின்னர் எனது தாயிடம் இதுகுறித்து கூறினேன். அதை தாய் தட்டிக்கேட்ட நிலையில், பரமநாதன் எங்களை அடித்து துன்புறுத்தினார்.

இதனால் எனது தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்து தற்போது நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே பரமநாதன் மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement