‘நண்பர்களின் வற்புறுத்தலினாலே போதை பழக்கத்திற்கு ஆளானேன்'- கன்னட நடிகை ராகினி 

Kannada-actress-Ragini-says-she-became-addicted-to-drugs-BECAUSE-OF-FRIEND-S-FORCE

கன்னட சினிமா துறையினருக்கு கஞ்சா, ஹெராயின் மாதிரியான போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் கன்னட  நடிகை  ராகினி இருந்தது தெரியவந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். 


Advertisement

image

அவரிடம் நேற்று சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். 


Advertisement

விசாரணையில் “ அவர் பெரிதும் ஒத்துழைக்கவில்லை. சுமார் 50 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. 

திரை உலகினருக்கு போதை பொருளை சப்ளை செய்த ரவிஷங்கரின் வறுபுறுத்தல் காரணமாகவே, தான் போதை பழக்கத்திற்கு ஆளானதாக  குறிப்பிட்டார்.

அதோடு ஒரு வாடிக்கையாளராகவே போதை பொருளை ரவிஷங்கரிடமிருந்து தான் வாங்கியதாகவும், மற்றபடி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்" என்கின்றனர் போலீசார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement