"மெஸ்ஸி கூட விளையாட ஆள் தேவை" கோலி புகைப்படத்தை பதிவிட்டு கலாய்த்த ஆர்சிபி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அர்ஜெண்ட்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கூட விளையாட ஆள்தேவை என்று கூறி விராட் கோலி கால்பந்து விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டு கலாய்த்துள்ளது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி.


Advertisement

அண்மையில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ்‌ லீக் காலிறுதியில் பார்சிலோனா படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு மெஸ்ஸி கேட்டுக் கொண்டார். பார்சிலோனா அணியோடு மெஸ்ஸி ஆண்டுதோறும் மேற்கொண்டு வரும் ஒப்பந்தத்தினால் அவரது முடிவுக்கு சட்ட ரீதியாக சிக்கல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

image


Advertisement

மேலும் மெஸ்ஸியின் கோரிக்கையை ஏற்க மறுத்து அணியிலிருந்து விடுவிக்க பார்சிலோனா மறுத்துவிட்டது. இதனையடுத்து "சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ள காரணத்தினால் நான் பார்சிலோனாவிலேயே இருக்க முடிவு செய்துள்ளேன். நான் சந்தோஷமாக இல்லாததால் அணியை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் சிறு வயதிலிருந்தே நான் விரும்பிய அணியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல விரும்பாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்த சீசன் வரை பார்சிலோனாவிலேயே விளையாடுவேன்’ என மெஸ்ஸி கூறினார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்காக அமீரகத்தில் பயிற்சி மேற்கொள்ளும் ஆர்சிபி அணி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் விராட் கோலி உள்ளிட்ட ஆர்சிபி வீரர்கள் கால்பந்து விளையாடுவதுதான் அது.. அந்தப் புகைப்படத்தை பதிவிட்டு "நாங்கள் கேள்விப்பட்டோம் மெஸ்ஸியுடன் விளையாடுவதற்கு புதிய அணி வீரர்கள் தேவை" என கலாய்த்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement