சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் தேமுதிக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே திருத்தங்கல் அய்யாபிள்ளை சந்தில் வசிப்பவர் சங்கிலி ராஜன் (வயது 48). தேமுதிக திருத்தங்கல் நகர முன்னாள் செயலாளராக இருந்த இவர், கட்சியின் உறுப்பினராக இருந்து வந்தார். விழுப்புரம் சாலையில் மளிகைக்கடை நடத்தி வந்த இவர், அதிவீரன்பட்டி செல்லும் சாலையில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கத்திக்குத்துடன் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்ட அப்பகுதிமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறைனர் சங்கிலி ராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விருதுநகரில் இருந்து மோப்ப நாயை வரவழைத்து ஆய்வு நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சங்கிலி ராஜனுக்கும் திருத்தங்கலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாகவும், அப்பெண்ணின் சொத்து விவகாரம் தொடர்பாக சங்கிலி ராஜனுக்கும் பெண்ணின் உறவினர்களுக்கு முன்விரோதம் இருந்ததாகவும் அதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சங்கிலி ராஜனுக்கு ராமலட்சுமி என்ற மனைவியும் மகளும், மகனும் உள்ளனர்.
Loading More post
திரிணாமுல் புகார் எதிரொலி: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை அகற்ற நடவடிக்கை
திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை - கே.பாலகிருஷ்ணன்
அதிமுக தேர்தல் அறிக்கை: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?