வசதியான வீடுகளை விரும்பும் துபாய் வாசிகள்.. கொரோனாவுக்குப் பிறகு நடந்த மனமாற்றம்...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பரவலுக்குப் பிறகு துபாய் நகரில் வசிக்கும் மக்கள், அதிக திறந்தவெளிகளைக் கொண்ட காற்றோட்டமான பெரிய வீடுகளை விரும்புவதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


Advertisement

"மக்களிடம் கிடைப்பதை வைத்துக்கொண்டு வாழும் எளிய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. துபாயில் திறந்தவெளி இல்லாத வீடுகளில் வசித்தவர்கள், காற்றோட்டமிக்க பெரிய வீடுகளை விரும்பத் தொடங்கியுள்ளனர். தற்போது வீடுகளின் விலைகளும் இறங்குமுகமாக உள்ளன" என்கிறார் ரியல் எஸ்டேட் அதிபர் பரூக் சையத்.

image


Advertisement

துபாயின் சில பகுதிகளில் வில்லா மற்றும் டவுன்ஹவுஸ் திட்டங்கள் மிகப்பெரும் வெற்றியை அடைந்துள்ளன. அதுபோன்ற கூடுதல் வசதியான வீடுகளுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. 2020 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட டவுன்ஹவுஸ் திட்டத்தில் வீடுகள் அனைத்தும் விற்றுத் தீர்த்துவிட்டதாகவும் ப்ரூக் கூறுகிறார்.

image

துபாயில் மட்டும் 31 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் 7,400 வில்லாக்களும் அடங்கும். மேலும், 10,800 வில்லாக்கள் 2020க்குள் மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கொரோனா கால அனுபவங்களை மீண்டும் விரும்பாத மக்கள், மிகப்பெரிய இடவசதிகளுடன் கூடிய வில்லாக்களில் வாழ விரும்புகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement