22 மொழிகளில் சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை... உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 


Advertisement

கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுச்சூழல் தாக்க  மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது இந்தி மற்று ஆங்கில மொழிகளில் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த வரைவு அறிக்கை குறித்தான விவாதங்கள் எழுந்த நிலையில், அறிக்கை குறித்தான கருத்தை 60 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.

image


Advertisement

இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரைவு அறிக்கையானது தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தற்போது  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement