தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனையில் நன்றாக சிகிச்சை அளிப்பதாக பாராட்டி கொரோனாவிலிருந்து தனது தந்தையைக் காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அவரது மகன்.
சென்னையைச் சேர்ந்த ரங்கேஷ் என்பவர் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ’’எனது தந்தையை சிறப்பான சிகிச்சைமூலம் கொரோனாவிலிருந்து காப்பாற்றியதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது அப்பா ஆர்.பாலன்(58 வயது) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அவரது நுரையீரல் 70% பாதிப்படைந்துவிட்டது. நான் பல தனியார் மருத்துவமனைகளில் சேர்க்க முயற்சி செய்தபோதும், பல லட்சம் செலவழித்தாலும் அவரைக் காப்பாற்றுவது கடினம் என்று கூறிவிட்டார்கள்.
அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள்மீது நம்பிக்கை வைத்து ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நான் அணுகினேன். ஆகஸ்ட் 13ஆம் தேதி எனது தந்தை இங்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆக்ஸிஜன் மற்றும் தகுந்த மருந்துகள் வழங்கப்பட்டது.
உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு மருத்துவமனை இயங்கிவருவதைக்கண்டு நான் ஆச்சர்யப்பட்டேன். தனியார் மருத்துவமனைகளைவிட மிகவும் கவனமாக எனது தந்தையை கவனித்துக்கொண்டார்கள். 17 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு எனது தந்தை பூரணமாக குணமடைந்துவிட்டார். தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். என் வாழ்வின் ஹீரோவைக் காப்பாற்றியதற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!