கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை வேகமெடுத்துள்ளதாக பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மாருதி சுசுகி நிறுவனம் தன் உள்நாட்டு விற்பனை 20.2% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் மட்டும் 1,16,704 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 38,205 வாகனங்களை விற்றுள்ள ஹுண்டாய் நிறுவனம் தன் விற்பனை 19.9% உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் 13,507 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதன் உள்நாட்டு விற்பனை ஒரு சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதேசமயம் டொயோட்டா நிறுவனம் தன் விற்பனை 48% குறைந்துள்ளதாகவும், ஆகஸ்டில் 5,555 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது. கார் நிறுவனங்களில் புது வரவான எம்ஜி மோட்டாரின் விற்பனை 41.2% அதிகரித்துள்ளது. ஆகஸ்டில் 2,851 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இருசக்கர வாகனப்பிரிவில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் தன் விற்பனை 8.52% உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் ஆகஸ்டில் 5,68,674 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2,87,398 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதால் அதன் விற்பனை ஒரு சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுசுகி நிறுவனம் தன் விற்பனை 15.35% குறைந்துள்ளதாகக் கூறியுள்ளது. ஆகஸ்டில் அந்நிறுவனத்தின் 53,142 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்டில் தங்கள் நிறுவனத்தின் 47,571 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதால் உள்நாட்டு விற்பனை 2% குறைந்துள்ளதாக, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூறியுள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!