உசிலம்பட்டி அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டியைச் சேர்ந்த சிங்கம் என்பவரது மகன் விஜயகுமார் (24). இவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளோரிடம் கோபித்துக் கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனிடையே போத்தம்பட்டி அருகே அல்லிக்கொடி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற உசிலம்பட்டி தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணமால் போன விஜயகுமார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Loading More post
"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
புதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
எங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி? - கங்குலி தகவல்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!