[X] Close >

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அமைச்சர் எச்சரிக்கை

srilankan-minister-about-tamil-fisherman

கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்தால், தமிழக படகு உரிமையாளர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Advertisement

இலங்கை நாடாளுமன்றத்தில் மீன்வளத்துறை தொடர்பான விவாதம் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள், குறைகள் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா, இலங்கையின் தென்பகுதியான திரிகோணமலை, மட்டக்களப்பு உள்பட சில பகுதிகளில் உள்ள மீனவர்களின் குறைகள், பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா மட்டக்களப்பு பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது, இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களின் 162 படகுகள் இலங்கை வசம் இருக்கிறது. முதற்கட்டமாக தமிழக மீனவர்களின் படகுகளில் 40 முதல் 80 படகுகள் வரை விரைவில் விடுவிக்கப்படலாம் என்றார்.

மேலும் பேசிய அவர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவது தொடர்கதையாக உள்ளதாகவும், அவ்வாறு இனிமேல் மீன்பிடிக்க வந்து சிறை பிடிக்கப்பட்டால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, அவர்கள் வந்த படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதுதொடர்பான சட்டத்தை 6-ந் தேதி நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.  


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close