[X] Close

சம்பள பாக்கி தராத மாமனார்..: கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் சம்பள பாக்கியை தராமல் காலம் தாழ்த்தி வந்த மாமனாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement

கோவை மதுக்கரை மார்க்கெட் வி.ஓ.சி வீதியைச் சேர்ந்த கணேசன் கார்பெண்டராக வேலை செய்து வந்தார். இவரது மருமகன் அரிசிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன். இவரும் கணேசனுடன் கார்பெண்டர் வேலை செய்து வந்துள்ளார். இதில், கணேசன், விக்னேஸ்வரனுக்கு சம்பள பாக்கி வைத்ததாக தெரிகிறது.

இதையடுத்து விக்னேஸ்வரன், கணேசனிடம் அடிக்கடி சம்பளம் கேட்டு வந்துள்ளார். கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் கணேசன் வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன் சம்பள பாக்கியை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து கணேசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணேசனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement

இது தொடர்பாக கணேசனின் மனைவி குமாரி மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மருமகன் விக்னேஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து, கொலை முயற்சியாக பதிவு செய்த இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

loading...

Advertisement

Advertisement

Advertisement