உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம் வசந்தகுமார் : நடிகர் சிலம்பரசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம் வசந்தகுமார் என நடிகர் சிலம்பரசன் புகழாரம் சூட்டியுள்ளார்.


Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும். விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் என துவக்கி வைத்தவர்.

image


Advertisement

கன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தை கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர். குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக் கொண்டவர். சூட்ட நிறைய புகழாரங்கள் உண்டு. ஆனால் இவ்வளவு விரைவில் அவரை இழப்போம் என எண்ணியதே இல்லை. ஏற்க முடியாத இழப்பு இது. நண்பன் விஜய் வசந்தின் குடும்பம் இந்த பேரிழப்பை எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை.

Congress MP and Vasanth & Co founder H Vasanthakumar dies due to COVID-19 |  The News Minute

வசந்த குமாரை இழந்துவாடும் குடும்பம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், தொகுதி மக்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன். அஞ்சலிகள்” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement