நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா மீது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்கரவர்த்தியின் சில வாட்ஸ் ஆப் உரையாடல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு போதை தடுப்புப் பிரிவு காவல்துறையை அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டது.
இதையடுத்து விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு காவல் துறை, ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் ரியா, போதைப் பொருள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவரா? என்பது பற்றியும் விசாரிக்கப்படும் என போதைப் பொருள் தடுப்பு காவல்துறை தலைவர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரியா மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்திருப்பது வியப்பளிப்பதாக அவரது வழக்கறிஞர் சதிஷ் மணிஷின்டே தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ரியா ரத்தப் பரிசோதனைக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!