நாடாளுமன்ற கட்டடத்தில் ரகசிய குறிப்புகளுடன் சுற்றித் திரிந்த ஜம்மு காஷ்மீர் நபர் கைது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் அருகே ரகசிய குறிப்புகளுடன் சுற்றித் திரிந்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபரை சிஆர்பிஎஃப் கைது செய்துள்ளது, இவரிடம் இருந்து இரண்டு ஐடிகள் வெவ்வேறு பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


Advertisement

image

ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தை சேர்ந்தவர் எனக் கூறும் அந்த நபர், நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளால் சிஆர்பிஎஃப் வீரர்கள் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த இரண்டு அடையாள அட்டைகளும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஓட்டுநர் உரிமத்தில் ஃபிர்டாஸ் என்றபெயரும், ஆதார் அட்டையில்  மன்சூர் அகமது அஹாங்கர் என்ற பெயரும் உள்ளது. அவர் இப்போது டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை நாடாளுமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கின்றனர். அவரைப் பற்றிய தகவல்கள் பல்வேறு இடங்களுக்கும் பகிரப்பட்டு விசாரிக்கப்படுகிறது.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement