”என் கணவரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டிருக்கலாம்” கொரோனாவல் இறந்தவரின் மனைவி புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்படும் தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி மற்றும் உறவினர்கள் பட்டுக்கோட்டை கோட்டாட்சியரிடம் நீதி கேட்டு மனு.


Advertisement

image

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நேருநகரைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் சலீம் என்பவர் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  


Advertisement

அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறிய நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த ஜூலை 29ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு இறந்துவிட்டதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை அன்று மாலை 4 மணிக்கு உறவினரிடம் ஒப்படைத்தது. இதனை தொடர்ந்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சலீமின் உடல் பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

image

இந்நிலையில், அவருடைய மனைவி சர்மிளா, அவரது 2 குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன், சமூக ஆர்வலர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சலீமின் படத்தை கைகளில் ஏந்தியபடி சார் ஆட்சியர் பாலச்சந்தரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


Advertisement

அதில் தனது கணவர் உடல் அடக்கம் செய்யப்படும் போது தமிழக அரசின் கொரோனோ விதிமுறை அமலில் இருப்பதாக கூறி கணவரின் உடலை எங்களிடம் காட்டவில்லை. இதனால் என் கணவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. 12 மணி நேரம் காலதாமதமாக உடல் வழங்கியதால் கணவரின் உடல் உள்ளுறுப்புகள் களவாடப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனாவால் இறந்தவர்கள் பட்டியலில் என் கணவரின் பெயர் இல்லை என்றும்.

image

இதனால் கொரோனா பாதிப்பில்லாத என் கணவருக்கு சிகிச்சையை தவறுதலாக அளித்துள்ளனர். அதனால் துர்மரணம் ஏற்பட்டுள்ளது. எனவே எனது கணவரின் உடலை தோண்டி எடுத்து மருத்துவக்குழு மூலம் பிரேத பரிசோதனை செய்து எனக்கும், என் குடும்பத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement