மதுரையில் டீக்கடைகாரர் ஓடஓட வெட்டிக் கொலை... மர்ம கும்பலை தேடும் போலீசார்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் தேநீர் கடை உரிமையாளர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.


Advertisement

image
மதுரை கே.புதூர் பேருந்து நிலையம் அருகே தேநீர் மற்றும் எண்ணெய் கடை நடத்தி வருபவர், மதுரை சூர்யா நகர் பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் முருகன். இவர் தனது வீட்டிலிருந்து கடையை திறப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சக்தி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் முருகனை வழிமறித்துள்ளனர்.

image
பின்பு அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் முருகனை ஓட ஓட விரட்டி வெட்டியதில் முருகனின் தலை துண்டானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொலை செய்த மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

முன்னதாக முருகன் நிலம் வாங்கியதில் முன்விரோதம் இருந்துவந்துள்ள நிலையில் அதன் காரணமாக கொலை நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...
Related Tags : மதுரைMadurai

Advertisement

Advertisement

Advertisement