புழல் சிறையில் இருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதியை, போலீசார் இன்று அதிகாலை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
புழல் மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் நன்னடத்தை அடிப்படையில், நாள்தோறும் 10 முதல் 20 கைதிகள் வரை சிறைக்கு வெளியே, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, புதர்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு தண்டனை கைதிகள் 7 பேர் சிறைக்கு வெளியே தோட்ட வேலை செய்தனர். பின்னர் திரும்பிய கைதிகளில் ஜெயராஜ் (38) என்ற கைதியை மட்டும் காணவில்லை. அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரிகள் அக்கம் பக்கத்தில் தேடினர். காணவில்லை.
ஜெயராஜ், வளசரவாக்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர். 2008-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் கைதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் வளசரவாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று தேடினர். அப்போது ஜெயராஜ் அங்கு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Loading More post
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!