[X] Close

இனப்பெருக்கத்திற்காக கொடைக்கானல் நோக்கிவரும் அரியவகை நெருப்புக் குயில்கள்...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அரிதாக காணப்படும், நெருப்புக் குயில்கள் கொடைக்கானல் கீழ்மலை காடுகளுக்கு வரத்துவக்கம்.
பிளேம் மினிவெட் என்று அழைக்கப்படும் நெருப்புக்குயில்கள், கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளுக்கு அதிகமாக வரத்துவங்கியுள்ளன.


Advertisement

image

இதமான வெப்ப மண்டலமாக உள்ள, தாழ்வான மலைக்காடுகளில் கூடுகட்டி வாழும் இந்த நெருப்புக் குயில்கள், கீழ்மலைப்பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மச்சூர், தடியன் குடிசை உள்ளிட்ட, கீழ்மலை சுற்றுவட்டார சோலை வனங்களில் உள்ள பகுதிகளுக்கு, கூட்டம் கூட்டமாக வரத்துவங்கியுள்ளன.


Advertisement

image
இதில் ஆண்குயில் நெருப்பு வண்ணத்திலும், பெண்குயில் மஞ்சள் நிறத்திலும் இருக்கும் என்றும், இந்த கால கட்டம் நெருப்புக்குயில்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலம் என்பதால், கீழ்மலைப்பகுதிகளில் தற்பொழுது அதிகமாக காணப்படுவதாக பழங்குடியின மக்கள் கூறுகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement