[X] Close

மதுரையில் 3500 அரசமர இலைகளால் உருவாக்கப்பட்ட நர்த்தன விநாயகர் சிலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த தங்கராமு என்பவர் தனது வீட்டில் 3500 அரசமர இலைகளால் நர்த்தன விநாயகர் சிலையை உருவாக்கி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்.


Advertisement

image

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை உள்ள நிலையில், வீடுகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர் விநாயகர் சிலைகளை வைத்து அதனை அங்கேயே கரைத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இந்நிலையில் மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த தங்கராமு என்பவர் தனது வீட்டில் அரசமர இலைகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்.


Advertisement

3500 அரசமர இலைகளை பயன்படுத்தி நர்த்தன விநாயகராக கையில் குச்சிகளை ஏந்தி தாண்டியா நடனம் ஆடுவது போல விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக விநாயகர் அரசமரத்தடியில் அமர்ந்து அருள்பாலிப்பவர் என்பதை உணர்த்தும் விதமாக மதுரையில் அரசமர இலைகளால் ஆன விநாயகர் உருவாக்கியதாக தங்கராமு தெரிவித்தார். மேலும் விநாயகருக்கு பொரி, பழங்கள், கொழுக்கட்டை ஆகியவற்றை படைத்தும் வழிபாடு செய்யப்பட்டது.

loading...

Advertisement

Advertisement

Advertisement