[X] Close >

PTSD அதீத மன உளைச்சல் டிஸார்டர் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

PTSD---Post-traumatic-stress-disorder-Symptoms-and-Causes

பி.டி.எஸ்.டி(Post-traumatic stress disorder) அல்லது அதீத மன உளைச்சல் டிஸார்டர் என்பது ஏதேனும் அதிர்ச்சிகரமான செய்தியை கேட்பதால் அல்லது அனுபவிப்பதால் மனநிலையில் உண்டாகும் மோசமான மாற்றம். ஃப்ளாஸ்பேக், கனவு மற்றும் அதிகமான கவலை, அத்துடன் அது தொடர்பாக என்ன நடக்குமோ என்று அளவுக்கதிகமாக யோசித்து, கட்டுபாடற்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல் போன்றவை மனநிலையை மோசமான அதிர்வுகளை உண்டாக்கும்.


Advertisement

அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை சந்திக்கும் பலருக்கும் தற்காலிகமாக சரிசெய்தல் மற்றும் தற்காலிமாக சமாளித்தல் என்பது சிரமமாக இருக்கலாம். ஆனால் காலம் செல்லசெல்ல, தன்னை தானே பாதுகாத்துக் கொள்வதன்மூலம் அவர்கள் மேம்படுவார்கள். அறிகுறிகள் மோசமாக இருப்பவர்களுக்கு அதிலிருந்து வெளிவர பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். அன்றாட செயல்பாடுகளால்கூட சில பிடிஎஸ்டி பிரச்னை இருக்கலாம்.

image


Advertisement

அறிகுறிகள்

அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் பிடிஎஸ்டி-க்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கலாம். ஆனால், சில நேரங்களில் சம்பவம் நடந்த பல ஆண்டுகள்வரை கூட அறிகுறிகள் எதுவும் தெரியாது. இவை வெளிப்படும்போது சமூக அல்லது வேலை சூழலில், குடும்ப உறவுகளில் குறிப்பிடத்தக்க சிக்கல்களை உருவாக்குகின்றன. தினசரி வேலையை செய்வதிலும் இவை இடையூறுகளை உண்டாக்கும்.

இதன் அறிகுறிகளை ஊடுருவும் நினைவுகள், தவிர்ப்புகள், மனநிலையில் எதிர்மறையான மாற்றங்கள் மற்றும் உடல், உணர்ச்சிகளில் எதிர்விளைவுகள் என நான்காகப் பிரிக்கலாம். காலப்போக்கில் அறிகுறிகள் மாறுபடலாம் அல்லது நபருக்கு நபர்கூட மாறுபடும்.


Advertisement

ஊடுருவும் நினைவுகள்

 • அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து மனதில் அதைப்பற்றியே உருவாகும் தேவையற்ற துன்பம்மிக்க நினைவுகள்
 • முன்பு நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுபோல் மீண்டும் நடந்துவிட்டால் என்னசெய்வது என்ற எண்ணம் (ஃப்ளாஷ்பேக்குகள்)
 • ஏற்கனவே நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றிய கனவுகள் அல்லது திடீரென வரும அசம்பாவித கனவுகள்
 • அதிர்ச்சிகரமான சம்பவத்தை ஞாபகப்படுத்தும் சில விஷயங்களால் கடுமையான மன உளைச்சல் அல்லது உடலில் எதிர்வினைகள் ஏற்படுதல்

image

தவிர்ப்புகள்

 • சிலர் அவர்களுக்கு நடந்த அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தை பற்றி சிந்திப்பதையோ, பேசுவதையோ தவிர்ப்பர்.
 • முன்பு நடந்த தாங்கிக்கொள்ள முடியாத சம்பவத்தை நினைவூட்டும் இடங்களுக்குச் செல்லுதலை தவிர்த்தல் மற்றும் சில நபர்களை சந்திப்பதை தவிர்ப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.

மனநிலையில் எதிர்மறையான மாற்றங்கள்

 • தன்னைப் பற்றியோ, பிற நபர்களைப் பற்றியோ அல்லது உலகத்தைப் பற்றியோ உருவாகும் எதிர்மறை எண்ணங்கள்
 • எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற தன்மை
 • அதிர்ச்சிகரமான நிகழ்வின் முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ளமுடியாத நினைவுச் சிக்கல்கள்
 • நெருங்கிய உறவைப் பேணுவதில் சிரமம்
 • குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பிரிக்கப்பட்டதாக உணருதல்
 • ஒரு முறை அனுபவித்த செயல்களின்மீது மீண்டும் ஆர்வம் இல்லாமல் போதல்
 • நேர்மறை உணர்ச்சிகளை அனுபவிப்பதில் சிரமம்

image


உடல், உணர்ச்சிகளில் எதிர்விளைவுகள்

 • எளிதில் திடுக்கிடுவது அல்லது பயப்படுவது
 • ஆபத்துவரும் என்று எப்போதும் யோசித்து யோசித்து பாதுகாப்பாக இருப்பது
 • அதிகமாக குடிப்பது அல்லது மிக வேகமாக வாகனம் ஓட்டுவது போன்ற சுய அழிவு நடத்தை
 • தூங்குவதில் சிக்கல்
 • கவனச் சிதறல்
 • எரிச்சல், அதீத கோபம் அல்லது ஆக்கிரமிப்பு நடத்தை
 • குற்ற உணர்ச்சி அல்லது அவமானம்
 • 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, இந்த அறிகுறிகளும் அடங்கும்
 • அதிர்ச்சிகரமான சம்பவம் அல்லது அதிர்ச்சிகரமான நிகழ்வின் அம்சங்களை விளையாட்டின் மூலம் மீண்டும் செயல்படுத்துதல்
 • அதிர்ச்சிகரமான சம்பவத்தின் அம்சங்களை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது சேர்க்காத பயமுறுத்தும் கனவுகள்

image

பொதுவாக இவை காலப்போக்கில் சரியாகும். உதாரணத்திற்கு, கார் விபத்து அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகளைப் படிக்கும்போது தங்களுக்கு நடந்த நிகழ்வுகள் ஞாபகத்தில் வரும். ஒரு மாதத்திற்கும் மேல் அதே நிலையில் இருந்தால், நினைவுகளை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல் இருப்பதாக உணரும்போது மருத்துவர் அல்லது மனநல நிபுணரை அணுகுவது நல்லது. இவை நிலைமை மோசமடைவதைத் தடுக்கும்.

சிலருக்கு இதுபோன்ற சம்பவங்கள் நினைவில் வரும்போது, சில நபர்களை எதிர்கொள்ளும்போது அவர்களை கொலை செய்யவேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்பது போன்ற நினைவுகள் மேலோங்கும். அவர்கள் உடனே மனநல மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.

காரணங்கள்

 • கடுமையான விபத்து, பாலியல் வன்கொடுமை, மனதைக் காயப்படுத்தும் வார்த்தைகளை அன்புகுரியவர்களிடமிருந்து கேட்டல் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கிறது. சிலருக்கு ஏன் பிடிஎஸ்டி பிரச்னை வருகிறது என்றே தெரிவதில்லை.
 • அளவுக்கதிகமான கவலை, மன அழுத்தம், குடும்ப வரலாறு, பரம்பரை மனநோய்கள், தனிநபர் மனோபாவம் போன்றவைக்கூட காரணங்களாகக் கருதப்படுகின்றன.
 • மூளை மன அழுத்தத்திற்கு பதிலளிக்கும்விதமாக உடல் வெளியிடும் ரசாயனங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் உடலளவிலும் பிரச்னைகளை உருவாக்குகின்றன.

image

தடுப்பது எப்படி?

பயம், கோபம், பதட்டம், மனச்சோர்வு, குற்ற உணர்வு இவையனைத்துமே பிடிஎஸ்டி-யின் எதிர்விளைவுகள். சாதாரண மன அழுத்த நிலையிலிருக்கும்போதே தேவையான உதவி மற்றும் ஆதரவைப் பெறுவது மோசமான விளைவுகளைத் தடுக்கும்.

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மனம்விட்டு பேசலாம். எண்ணங்களை திசைதிருப்பலாம்.

மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

நெருங்கியவர்கள் கொடுக்கும் அரவணைப்பு, ஆல்கஹால் அல்லது மற்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும்.

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close