தெலுங்கானா ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலுங்கானாவில் உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் சிக்கித் தவிப்பு.


Advertisement

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது. இதில் பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

image


Advertisement

இதனை தொடர்ந்து கர்னூல் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியுள்ளது. இதுவரை தீ விபத்தில் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 6 பேர் ஸ்ரீசைலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தில் சிக்கியுள்ள 9 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

loading...

Advertisement

Advertisement

Advertisement