ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ரயில் மறியல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


Advertisement

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று நேற்று திமுக அறிவித்திருந்தது.

இதையடுத்து, இன்று காலை சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.


Advertisement

இதே போன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement