ஆதரவற்றவர்களுக்கு 4 மாதங்களாக உணவு வழங்கும் சூர்யா ரசிகர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையின் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு, நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேலாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.


Advertisement

நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய, மாணவ மாணவியர் கல்விக்காக உதவி செய்து வருகிறார். அவரது ரசிகர்களும் நற்பணி இயக்கம் மூலம் பல்வேறு உதவிகளை செய்கின்றனர்.

image


Advertisement

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது. இதில் பல ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

image

இந்நிலையில், சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இலவசமாக தினமும் மதியம் மற்றும் இரவு உணவுகளை, 4 மாதங்களுக்கு மேலாக சூர்யா ரசிகர்கள் வழங்கி உதவி செய்து வருகின்றனர். இரவு நேரங்களில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஆதரவற்று இருப்பவர்களுக்கும் அவர்கள் உதவி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement