[X] Close >

4 ஆண்டுகளில் 7-வது முறையாக துணிச்சலுக்கான பதக்கம் வாங்கிய சிஆர்பிஎஃப் அதிகாரி

CRPF-officer-awarded-gallantry-medal-7th-time-in-four-years

சிஆர்பிஎஃப் அதிகாரி நரேஷ்குமார் வெள்ளிக்கிழமை துணிச்சலுக்கான பதக்கத்தை வாங்கியுள்ளார். 2017-ஆம் ஆண்டு ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகே பாதுகாப்பு படை முகாமில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில், சிறப்பான யுக்திகளால் தனது படையை வழிநடத்தியதற்காக இந்த பதக்கம் வழங்கப்பட்டது. இவருக்கு ,கடந்த 4 ஆண்டுகளில் 7வது முறையாக கிடைத்த பதக்கம் இது.


Advertisement

தாய் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்ய விரும்புவதாகவும், அதற்காகத்தான் சீருடையை அணிந்ததாகவும், நரேஷ் குமார் உருக்கமாக கூறியுள்ளார்.

image


Advertisement

ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் 81 பேருக்குப் பிறகு, இந்த முறை இரண்டாவது 55 அதிக பதக்கங்களை சிஆர்பிஎஃப். 3.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படை இது.

பஞ்சாப் ஹோஷ்ஹியார்பூரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார். 2017ஆம் ஆண்டு இவருக்கு துணிச்சலுக்கான முதல் பதக்கம் வழங்கப்பட்டது. இவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மத்திய படையின் உயரடுக்கு விரைவான நடவடிக்கைக் குழுவின் தலைவராக உள்ளார். கூர்மையான தந்திரமிக்க புத்திசாலித்தனம் மற்றும் நிகரற்ற தைரியம் உடையவர் குமார் என அதிகாரி ஒருவர் பாராட்டியுள்ளார். இந்த படைக்கு வழங்கப்பட்ட 55 துணிச்சலுக்கான பதக்கங்களில், 41 ஜம்மு காஷ்மீர் நடவடிக்கைகளுக்காகவும், 14 சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் வழங்கப்பட்டன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close