இந்துக்களுக்கு எதிராக பதிவிட்டதாக ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமூக ஊடகங்களில் இந்து தெய்வங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக டெல்லி ராஜூரி கார்டனை சேர்ந்த ஆம்ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஜர்னைல் சிங்கை அக்கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.


Advertisement

image

இந்து கடவுள்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு பின்னர் அவர் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார், அதனால் அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.  இந்த பதிவினை இட்டது நான் அல்ல, எனது மகன்தான் என் தொலைபேசியைப் பயன்படுத்தி தகவல்களை வெளியிட்டார் என ஜர்னைல் சிங் விளக்கமளித்தார்.


Advertisement

ஆனால் “ஆம் ஆத்மி கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சி, எந்த மதத்தையும் அவமதிக்கும் எவருக்கும் கட்சியில் இடமில்லை. ஜர்னைல் சிங்  வெளியிட்ட பதிவினை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக கண்டிக்கிறது, அதனால் அவர் உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடமிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், ”என்று ஆம் ஆத்மி கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Courtesy: https://www.newindianexpress.com/cities/delhi/2020/aug/13/aap-suspends-former-mla-jarnail-singh-for-anti-hindu-comments-2182793.html

loading...

Advertisement

Advertisement

Advertisement