ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் மட்டும் கொரோனா வைரஸ் பற்றி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட, பதிவிடப்பட்ட தவறான 70 லட்சம் பதிவுகளை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. இதில் போலி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குணமாக்கும் முறைகளும் அடங்கும்.
2018ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆறாவது சமூக தரநிலை அமலாக்க அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த தரவை வெளியிட்டுள்ளது. மேலும் பதிவிடும் தகவல்களை மெருகேற்ற அதன் தளர்வான அணுகுமுறைகளின் பின்னடைவை சரிசெய்யும் வகையில் விதிகளை கடுமையாக்கி உள்ளது.
2021ஆம் ஆண்டு வெளிவரவுள்ள அளவீடுகளை தணிக்கை செய்ய நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்த சமூக வலைதளம் கூறியுள்ளது. தேவையற்ற விளம்பரங்களை புறக்கணிக்க ஜூலை மாதம் திட்டமிட்டதன்பேரில் இந்த முடிவை எடுக்கவுள்ளது.
முதல் காலாண்டில் 9.6 மில்லியன் பதிவுகளை நீக்கியது. இரண்டாவது காலாண்டில் தேவையற்ற பதிவுகளாக கருதப்பட்ட சுமார் 22.5 மில்லியன் பதிவுகளை நீக்கியுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள்தான் இதற்கு காரணம் என்று கூறுகிறது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு சம்பந்தப்பட்ட 8.7 மில்லியன் பதிவுகளை நீக்கியுள்ளது. தவறான பதிவுகள் முன்பு 6.3 மில்லியனாக இருந்தது. முதல் காலாண்டில் 4.7 மில்லியன் பதிவுகளை நீக்கியது. அதனுடன் ஒப்பிடும்போது 4 மில்லியன் பதிவுகள் அதிகமாகி உள்ளது.
அந்த வரிசையில் தற்போது கொரோனா தொற்று பற்றி பலவித தவறான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கொரோனா தொடர்பான தவறான 7 மில்லியன் பதிவுகளை இந்த இரண்டாம் காலாண்டில் மட்டும் நீக்கியுள்ளது. இதை தடுக்கவும், சுய தீங்கு மற்றும் சிறுவர் பாலியல் தொல்லைகள் தொடர்பான பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் திட்டங்களை மேம்படுத்த நிபுணர்களுக்கு ஆலோசனை வழங்க அழைப்பு விடுத்துள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்