ஆண் நண்பருடன் சேர்ந்துகொண்டு தந்தையிடமே ரூ.19 லட்சம் கொள்ளையடித்த மகள்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆண் நண்பருடன் சேர்ந்துகொண்டு சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்


Advertisement

மும்பையைச் சேர்ந்தவர் உம்ரதரஷ் குரேஷி. இவரது மகள் உஷ்மா குரேஷி (21). ஜூலை 30 ம் தேதி அன்று தன் மகள் உஷ்மாவை
காணவில்லை என உம்ரதரஷ், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மகள், அரோரா என்பவருடன் வீட்டை விட்டு
போயிருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அரோரா (35) பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர்.

image


Advertisement

இந்நிலையில் புகாரின் அடிப்படையில் போலீசார் உஷ்மாவை தேடி வந்துள்ளனர். இதற்கிடையே வீட்டின் லாக்கரில் இருந்த நகையும், ரூ.10 லட்சம் ரொக்கமும் காணவில்லை என்பதை உம்ரதரஷ் கண்டறிந்துள்ளார். ஜூலை 23ம் தேதி நகைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றவுள்ளதாக லாக்கர் சாவியை தந்தையிடன் உஷ்மா வாங்கியுள்ளார். அதனை நினைவுப்படுத்திய தந்தை இது குறித்து தன் மகள் மீதே போலீசாரிடம்  புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் உஷ்மா மற்றும் அவரது ஆண் நண்பரை தேடிவந்தனர். தேடுதலில் பஞ்சாபில் அவர்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பஞ்சாப் போலீசாரை தொடர்புகொண்ட மும்பை போலீசார் தங்கும் விடுதியிலிருந்த உஷ்மாவையும், அரோராவையும் கைது செய்தனர்.

image


Advertisement

பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement