[X] Close

3 கோடி ரூபாய் சொத்தை பறித்துக்கொண்டு 79 வயது தந்தையை தெருவில் தூக்கி எறிந்த 3 மகன்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தந்தையின் பேரில் இருந்த 3 கோடி ரூபாய் சொத்தை எழுதிவாங்கிக் கொண்டு 79 வயது தந்தையை வீட்டை விட்டு விரட்டி தெருவில் அலையவிட்ட பரிதாப சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது இவரது மூன்று மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

image

தெலுங்கானா, சிதிப்பேட் மாவட்டத்திலுள்ள மதிரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் 79 வயதான முதியவர் போதுமல்லையா. இவரது மகன்கள் போது சுதாகர், போது ஜனார்தன், போது ரவீந்தர் ஆகியோர் போதுமல்லையாவின் மூன்று கோடி ரூபாய் சொத்தை பறித்துக்கொண்டு அவரை ஆதரவின்றி தெருவில் அலையவிட்டார்கள். இவரிடம் இருந்த தங்கம், வெள்ளி நகைகளையும் பிடுங்கிக்கொண்டனர் இவர்கள். உடல் பாதிக்கப்பட்ட நிலையில் தங்குவதற்கு இடம் இல்லாமல் தெருவில் அலைந்துகொண்டிருந்த முதியவருக்கு உணவு கொடுக்கும் கிராம மக்களையும் தாக்கியுள்ளனர் இவரது மகன்கள். தாயின் பேரில் உள்ள ஆறு ஏக்கர் நிலத்தை எழுதி வாங்குவதற்காக அவரை மட்டும் ஒருமகன் தன்வீட்டில் தங்கவைத்துள்ளார். இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் மூன்று மகன்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement