’நாங்கள் எங்களுடையே ஒரே மகளை இழந்துவிட்டோம், இப்போது இந்த சமூக ஊடங்கங்கள் எங்களை கொன்றுவிடும்’ என்று மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியனின் பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அவரின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மும்பையின் 14 ஆம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். திஷா சாலியன் ஏன் தற்கொலை செய்துக்கொண்டார் என்று இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திஷா 14வது மாடியில் இருந்து குதித்தபோது அவரின் வருங்கால கணவருடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திஷா தற்கொலை தொடர்பாக அவரின் பெற்றோரிடம் போலீசார் முதலில் வாக்குமூலம் வாங்கினார்கள். இதையடுத்து அவரின் வருங்கால கணவரிடம் வாக்குமூலம் வாங்கினார்கள். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில். சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் திஷா சாலியன் குறித்து பல்வேறு செய்திகள் உலா வருகிறது.
இந்நிலையில் "ஆஜ்தக்" செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த திஷா சாலியனின் தாயார் "நாங்கள் எங்களுடைய ஒரே மகளை இழந்து தவிக்கிறோம். இப்போது இந்த ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் தவறான செய்திகளை பரப்பி எங்களை கொல்ல பார்க்கிறார்கள். தயவு செய்து திஷா குறித்த பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை